இம்ரான் மஹ்ரூப் எம்.பி சுட்டிக்காட்டியதையடுத்து கிழக்கு மாகாண கொவிட் செயலணியில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 29, 2021

இம்ரான் மஹ்ரூப் எம்.பி சுட்டிக்காட்டியதையடுத்து கிழக்கு மாகாண கொவிட் செயலணியில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநரின் கொவிட்-19 செயலணியில் முஸ்லிம் பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இலங்கை இராணுவப் படையில் சேவையாற்றும் லெப்டினன்ட் கேணல் அனஸ் அஹ்மத் நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் ஏழு பேரைக் கொண்ட விசேட கொவிட்-19 செயலணியொன்று மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டுள்ளது. 

கொவிட் இடர்நிலை தொடர்பில் பொதுமக்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே இந்த செயலணி நியமிக்கப்பட்டது.

இதில் முஸ்லிம் பிரதிநிதியொருவர் உள்ளடக்கப்படாமை தொடர்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் புதன்கிழமை (26) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இதனை கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் "குறித்த செயலணியில் முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த அனஸ் அஹமட் என்பவரை நியமித்துள்ளதாக கிழக்கு ஆளுநரின் ஊடக செயலாளர் தெரிவித்தார்.

(ரொட்டவெவ  நிருபர்)

No comments:

Post a Comment