ஆபத்து நீங்கியது...! சீன ரொக்கெட்டின் பாகம் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

ஆபத்து நீங்கியது...! சீன ரொக்கெட்டின் பாகம் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த சீனாவின் மிகப்பெரிய ரொக்கெட்டின் பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்துள்ளன.

ரொக்கெட் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தவுடன் அதன் பெரும்பகுதி கூறுகள் அழிவடைந்ததாகவும் சீன அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் ஏவப்பட்ட சீனாவின் லாங் மார்ச் 5-பி (Long March 5B) என்ற குறித்த ரொக்கெட் ஞாயிற்றுக்கிழமை வளிமண்டலத்தின் வழியே சரிந்து, 72.47 டிகிரி கிழக்கு நெட்டாங்கு மற்றும் 2.65 டிகிரி வடக்கு அகலாங்கு இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுக்கு அருகில் வீழ்ந்துள்ளது.

லாங் மார்ச் 5-பி ரொக்கெட்டின் 18 டன் பாங்கள் பீஜிங் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 10.24 (02:24 GMT) மணிக்கு பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது என்று சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேநேரம் இந்த சம்பவம் காரணமாக எந்த தீங்கும் ஏற்படவில்லை என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

அமெரிக்காவைப் போல் தங்களுக்கென்று சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில் லாங் மார்ச் 5-பி (Long March 5B) என்றழைக்கப்படும் 100 அடி உயர ராட்சத ரொக்கெட்டை விண்ணில் செலுத்தியது.

தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட் வினாடிக்கு சுமார் 4.8 மைல் (13.7 கி.மீ) வேகத்தில் பயணித்து பூமியை சுற்றி வந்தது.

No comments:

Post a Comment