கொவிட் நோயாளர்கள் வைத்தியசாலையில் தவறாக நடத்தப்பட்டால் முறையிட விசேட இலக்கங்கள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

கொவிட் நோயாளர்கள் வைத்தியசாலையில் தவறாக நடத்தப்பட்டால் முறையிட விசேட இலக்கங்கள்

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் தவறாக நடத்தப்பட்டால் அது தொடர்பில் முறைப்பாடு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கொவிட் நோயாளர்கள் வைத்தியசாலையில் எதிர்கொள்ளும் கவலைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து முறையிட பல ஹாட்லைன் இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி 1999, 0117 966 366 மற்றும் 0710 107 107 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு நோயாளர்கள் முறையிட முடியும்.

சில கொரோனா நோயாளர்களை தவறாக நடத்துவது மற்றும் சில வைத்தியசாலைகளில் படுக்கைகள் இல்லாதது குறித்து சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு தீர்வுகாண தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad