சீனப் படகுகளின் தோற்றம் : பிலிப்பைன்ஸ் கடும் எதிர்ப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

சீனப் படகுகளின் தோற்றம் : பிலிப்பைன்ஸ் கடும் எதிர்ப்பு

பிலிப்பைன்ஸ் நிர்வாகத்தில் இருக்கும் தென் சீன கடலில் உள்ள தீவு ஒன்றுக்கு அருகில் சீனா தொடர்ச்சியாக சட்டவிரோதமாக தோன்றுவது மற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவது குறித்து பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

திட்டு தீவின் அருகாமையில் சீன கடல்சார் சொத்துகள் மற்றும் மீன்பிடிப்படகுகள் இடைவிடாது வருவது, தொடர்ந்து நிலைகொண்டிருப்பது மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது குறித்து பிலிப்பைன்ஸ் இராஜதந்திர எதிர்ப்பை முன்னெடுத்துள்ளது.

அந்த படகுகளை வாபஸ் பெறும்படி பிலிப்பைன்ஸ் கோரியுள்ளது. பிலிப்பைன்ஸின் 200 மைல் வர்த்தக வலயத்திற்குள் நூற்றுக்கணக்கான சீனப் படகுகள் கடந்த பல மாதங்களாக நிலைகொண்டிருப்பது சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தப் படகுகள் படையினருடையது என்று பிலிப்பைன்ஸ் நம்புவதோடு, அவை மோசமான காலநிலை காரணமாக அடைக்கலம் பெற்ற மீன்பிடிப்படகுகள் என்று சீனா குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad