யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித் தாயொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில் தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார்.

இந்நிலையில் தாய்க்கு தொடர்ந்து வைத்தியர்களின் விசேட கண்காணிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கவில்லை.

இந்நிலையில் தாய் தொற்றில் இருந்து பூரண சுகம் பெற்ற நிலையில் நேற்றையதினம் தனது இரட்டை குழந்தைகளுடன் வீடு திருப்பினார்.

No comments:

Post a Comment