பயணக்கட்டுப்பாட்டிலும் யாழில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் அட்டகாசம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

பயணக்கட்டுப்பாட்டிலும் யாழில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியும், மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி, உள்ளிட்ட பொருட்கள் என்பவற்றையும் அடித்து உடைத்தும் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், வீட்டிலிருந்த இளைஞன் ஒருவரின் தங்க சங்கிலி ஒன்றை தாக்குதலாளிகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளடங்கிய குழு மோட்டார் சைக்கிள்களில் வந்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கும்பல் மதுபோதையில் அப்பிரதேசத்தில் நீண்ட நேரமாக நின்று அட்டகாசம் புரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment