தெஹிவளை பகுதியில் ட்ரோன் கமராவை இயக்கியவர் கைது! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

தெஹிவளை பகுதியில் ட்ரோன் கமராவை இயக்கியவர் கைது!

தெஹிவளை பகுதியில் சட்டவிரோதமாக ட்ரோன் கமராவை இயக்கிய குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று மாலை தெஹிவளை, ரொபட் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், ட்ரோன் கமராவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயங்களில் ட்ரோன்களை இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் ட்ரோன்கள் இயக்கம் குறித்து கடுமையான வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அனைத்து ட்ரோன்களையும் இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment