வறுமையில் தவிக்கும் பெண் எம்.எல்.ஏ - பாதுகாப்புக்கு சென்ற வீரர்களே உணவு வழங்கும் நிலை - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

வறுமையில் தவிக்கும் பெண் எம்.எல்.ஏ - பாதுகாப்புக்கு சென்ற வீரர்களே உணவு வழங்கும் நிலை

வறுமையில் தவிக்கும் பெண் எம்.எல்.ஏ.வுக்கு பாதுகாப்புக்கு சென்ற வீரர்களே உணவு வழங்கும் நிலை உருவாகியுள்ளது.

தினசரி கூலித் தொழிலாளியின் மனைவியான எம்.எல்.ஏ சந்தனா. தனது பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட நான்கு மத்திய படை வீரர்களுக்கு தினசரி உணவு அல்லது அவர்களுக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை.

மேற்கு வங்காளத்தின் சால்டோரா தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சந்தான பவுரி. சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை விட 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேற்கு வங்காளத்தில் நடைபெறும் வன்முறையால் அங்குள்ள பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் மத்திய பாதுகாப்பு படை வழங்கப்பட்டு உள்ளது. தனது கட்சியின் முடிவுக்கு எம்.எல்.ஏ சந்தனாவும் கட்டுப்பட்டு உள்ளார்.

தினசரி கூலித் தொழிலாளியின் மனைவியான எம்.எல்.ஏ சந்தனா. தனது பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட நான்கு மத்திய படை வீரர்களுக்கு தினசரி உணவு அல்லது அவர்களுக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை.

எம்.எல்.ஏ.வின் கணவரும், அவரது இரண்டு குழந்தைகளும் பாழடைந்த ஒற்றை அறை குடிசையில் தண்ணீர் வசதி - கழிப்பறை வசதி கூட இல்லாமல் வசித்து வருகின்றனர். ஊரடங்கால் எம்.எல்.ஏவின் கணவருக்கும் வேலை இல்லை.

இதனால் பாதுகாப்பு பணிக்கு சென்ற மத்திய படை வீரர்கள் தங்கள் சொந்த பணத்தை போட்டு உள்ளூர் மளிகை கடையிலிருந்து பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி எம்.எல்.ஏவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உணவு வழங்கி வருகின்றனர்.

என் கணவர் ஒரு கூலித் தொழிலாளி . எங்கள் தினசரி சராசரி வருமானம் ரூ.400 ஆகும். ஊரடங்கால் வருமானம் இல்லை என்று எம்.எல்.ஏ. கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad