புதிய சட்டமா அதிபர் பதவிக்கு சஞ்ஜே ராஜரத்தினத்தின் பெயர் பரிந்துரை - News View

Breaking

Post Top Ad

Friday, May 7, 2021

புதிய சட்டமா அதிபர் பதவிக்கு சஞ்ஜே ராஜரத்தினத்தின் பெயர் பரிந்துரை

புதிய சட்டமா அதிபராக, பதில் சொலிசிட்டர் நாயகம், சஞ்ஜே ராஜரத்தினத்தை நியமிப்பது தொடர்பில் அவரது பெயர், பாராளுமன்ற பேரவையின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, புதிய சட்டமா அதிபர் நியமன நடவடிக்கைகளின் அடிப்படையில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கனடாவுக்கான உயர் ஸ்தானிகராக சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை நியமித்து ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனம் தொடர்பில், ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தான் சொந்த நாட்டிலேயே இருந்து மக்களுக்கு சேவையாற்றவே விரும்புவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad