வாகன போக்குவரத்தினை கண்காணிக்கவுள்ள ட்ரோன் கமரா - News View

About Us

About Us

Breaking

Monday, May 10, 2021

வாகன போக்குவரத்தினை கண்காணிக்கவுள்ள ட்ரோன் கமரா

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ட்ரோன் கமராப் பிரிவு இன்று தொடக்கம் வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியினை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவது, வீதிச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் நோக்கமாகும்.

காலி வீதி, பாராளுமன்ற வீதி, கண்டி - நீர்கொழும்பு வீதிகள் ஆகிய இடங்களை இலக்காகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ட்ரோன் கமராக்கள் 5 இடங்களில் இருந்து கண்காணிப்புக்களை மேற்கொள்ள இருக்கின்றன என்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான வருண ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment