இந்தியாவின் உருமாறிய கொரோனா 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 12, 2021

இந்தியாவின் உருமாறிய கொரோனா 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - உலக சுகாதார ஸ்தாபனம்

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கிய காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்தான். கடந்த அக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ்தான் தற்போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் 6 மண்டலங்களில் உள்ள 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 4,500 மாதிரிகளில் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவைத் தவிர்த்து இந்தியாவில் உள்ள பி.1.617 உருமாறிய வைரஸ் பிரிட்டனில்தான் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வகை உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற வைரஸ்களைவிட வேகமாக பரவுகிறது, உருமாற்றம் அடைந்துள்ளது என்று கூறியதுடன், அதன் குணங்களையும் பட்டியலிட்டு, கவலைத் தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment