வெளிநாட்டை சேர்ந்த கப்பல் ஒன்று ஜப்பானிய சரக்கு கப்பலுடன் மோதியதில் அதில் பயணித்த 12 மாலுமிகளில் மூன்று மாலுமிகள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன 3 மாலுமிகளை தேடும் பணி நடந்து வருகிறது.
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியான எஹிம் மாகாண கடற்பகுதியில் அந்நாட்டின் சரக்குக் கப்பல்கள் 11,454 எடையுடன் பயணித்துக் கொண்டு வந்துள்ளது. அந்த ஜப்பானிய கப்பலில் 12 மாலுமிகளும் இருந்துள்ளனர். அப்பொழுது ரசாயன பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த வெளிநாட்டு கப்பல் ஒன்று ஜப்பானியக் கப்பல் மீது மோதியுள்ளது.
இந்த திடீர் விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல் சேதமடைந்து நீரில் மூழ்க தொடங்கியது. அந்த கப்பலில் 12 மாலுமிகள் இருந்தனர். சரக்கு கப்பல் நேற்று அதிகாலை 2.45 மணியளவில் கடலில் மூழ்க தொடங்கியது.
இந்த விபத்தில் மாலுமிகளில் 3 பேரை காணவில்லை. அவர்கள் ஜப்பானிய நாட்டை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
மார்ஷல் தீவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு கப்பலில் 2696 டன் எடை கொண்ட ரசாயன பொருட்கள் இருந்ததாகவும், அந்த கப்பலில் 13 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதில் 8 பேர் தென் கொரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றும் 5 பேர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டு கப்பலில் வந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஜப்பானிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளதுடன், காணாமல் போன மூன்று ஜாப்பானிய மாலுமிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment