கொரோனா தொற்றின் 3ஆவது அலை தவிர்க்க முடியாதது : எச்சரிக்கை விடுத்தார் அரசுக்கான அறிவியல் ஆலோசகர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

கொரோனா தொற்றின் 3ஆவது அலை தவிர்க்க முடியாதது : எச்சரிக்கை விடுத்தார் அரசுக்கான அறிவியல் ஆலோசகர்

கொரோனா தொற்றின் 2ஆவது அலையால் இந்தியா திணறிக் கொண்டிருக்கும்போது, 3ஆவது அலை தவிர்க்க முடியாதது என அரசுக்கான விஞ்ஞானம் சார்ந்த ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்த வந்த நேரத்தில், கடந்த மாதத்தில் இருந்து திடீரென 2ஆவது அலை சூறாவளியாக சுழற்றி அடிக்க தொடங்கியது, முதல் அலையில் சமாளித்த பொதுமக்களும், அரசுகளும் இந்த சூறாவளிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

கடந்த இரண்டு வாரங்களாக தினந்தோறும் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. 2ஆவது அலையில் நோயாளிகளுக்கு அதிக அளவில் ஒக்சிஜன் தேவைப்படுகிறது. இதனால் ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியா திணறி வருகிறது. உயிரழப்பும் ஏற்பட்டு வருகிறது.

மே 15ஆம் திகதிக்குப் பிறகு கொரோனா சூறாவளில் சற்று சாந்தமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் 3ஆவது அலை தவிர்க்க முடியாதது என்று அரசுக்கான விஞ்ஞானம் சார்ந்த ஆலோசகர் விஜய் ராகவன் எச்சரித்துள்ளார்.

விஜய் ராகவன் ‘‘3ஆம் கட்ட அலை தவிர்க்க முடியாதது. இந்த வைரஸ் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. ஆனால், எந்த நேரத்தில் தாக்கி உச்சத்தை அடையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

அதிரிக்கும், ஆனால், நாம் 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராகுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தடுப்பூசி மேம்படுத்தல் போன்ற தற்போதைய கண்காணிப்பு தேவை’’ என்றார்.

No comments:

Post a Comment