30 பேருக்கு கொரோனா; தலவாக்கலை - சென்கூமஸ் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Friday, May 7, 2021

30 பேருக்கு கொரோனா; தலவாக்கலை - சென்கூமஸ் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது

தலவாக்கலை - சென்கூமஸ் கிராம சேவகர் பிரிவு இன்று (07.05.2021) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன், அப்பகுதியில் உள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய ஊழியர்களுக்கும், சென்கூமஸ் தோட்டத் தொழிலாளர்கள் 40 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், சுமார் 30 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தனிமைப்படுத்தல் விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி தோட்டப் பகுதியில் உள்ள நபரொருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதிலும் சிலருக்கு வைரஸ் தொற்று இருந்துள்ளது. இதனையடுத்தே பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையிலேயே தேயிலை ஆராய்ச்சி நிலைய ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை, இவ்விரு பகுதிகளுக்கும் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad