டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி 2 இலட்சம் கையொப்பங்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி 2 இலட்சம் கையொப்பங்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரும் ஒரு இணையத்தள விருப்பம் கோரல் மனு கடந்த சில நாட்களில் கிட்டத்தட்ட 2 இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள கோடை ஒலிம்பிக்கின் தொடக்கத்திற்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான கால அவகாசம் உள்ளன.

டோக்கியோ உலகளாவிய நிகழ்வை எவ்வாறு நடத்தலாம் மற்றும் தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஜப்பானிய பொதுமக்களை கொவிட்-19 இலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்ற கேள்விகள் இன்னும் உள்ளன.

இந்நிலையில் "டோக்கியோ ஒலிம்பிக்கை நிறுத்து" (Stop Tokyo Olympics) என்று இணையத்தளத்தில் தொடங்கப்பட்ட இணையத்தள பிரச்சாரம் இரண்டு நாட்களிலேயே 187,000 க்கும் அதிகமான கையொப்பங்களை பெற்று, இரண்டு இலட்சங்களை நெருங்குகிறது.

இந்த முடிவுகள் ஜப்பானின் தலைநகரில் பாரிய விளையாட்டு நிகழ்வை நடத்துவதில் பொதுமக்களின் கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தொற்றுநோயின் நான்காவது அலையை எதிர்த்து, மந்தமான தடுப்பூசி பிரச்சாரத்துடன் போராடி வரும் ஜப்பானிய அரசாங்கம் டோக்கியோவிலும் மற்ற மூன்று பகுதிகளிலும் அவசரகால நிலைகளை மே இறுதி வரை நீட்டிக்க முயல்கிறது என்று அந் நாட்டு பொருளாதார அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜூலை 23 ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment