வடக்கு நைஜீரியாவில் வாந்திபேதி நோய் பரவி வரும் நிலையில் இரண்டு வாரத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதோடு 300 க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பவுச்சி மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் இந்த நோய் பரவி இருப்பதோடு மாநிலத் தலைநகர் பவுச்சி மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில சுகாரார ஆணையாளர் முஹமது மைகோரோ தெரிவித்துள்ளார்.
நீரினால் பரவும் பக்டீரியா தொற்றான வாந்திபேதி நோயின் ஆரம்ப அறிகுறிகளாக வாந்தி, மலம் நீராகக் கழிவது, நீரிழப்பு மற்றும் சோர்வு ஆகியன காணப்படுகின்றன.
உணவுகளை மொய்க்கும் ஈக்களால் இந்த நோய் பரவலாம் என்பதோடு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் உயிராபத்துக் கொண்டதாகும்.
இந்த ஆண்டில் நைஜீரியாவின் எட்டு மாநிலங்களில் வாந்திபேதி நோய் பரவி இருப்பதோடு இதில் 50 பேர் வரை உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment