2023 உலகக் கிண்ண தகுதிக்கான இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கவுள்ள 9 ஆட்டங்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

2023 உலகக் கிண்ண தகுதிக்கான இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கவுள்ள 9 ஆட்டங்கள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மூன்று மாதங்களுக்குள் குறைந்தது மூன்று சுற்றுப் பயணங்கள் தற்சமயம் வரை உறுதியாகியுள்ளன.

ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாக இருக்கும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக குசல் ஜானித் பெரேரா தலைமையிலான இலங்கை அணி இன்று பங்களாதேஷுக்கு புறப்பட்டது.

இந்த தொடரின் பின்னர் மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கெடுப்பதற்காக ஜூன் 12 ஆம் திகதி இங்கிலாந்துக்கு புறப்படும்.

எதிர்வரும் டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்துக்கான ஆயர்த்தமாக முதலில் இங்கிலாந்துடனான டி-20 தொடரில் விளையாடும் இலங்கை அணி, உலகக் கிண்ண சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாக இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் முட்டி மோதும்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்தவுடன், ஜூலை 13 இந்தியாவுக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிக்கு இலங்கை அணி தயாராகும்.

அடுத்த மூன்று மாதங்களில் இலங்கை விளையாடும் இந்த 9 ஒருநாள் போட்டிகள் 2023 உலகக் கிண்ணத்துக்கான இலங்கையின் தகுதிக்கான தலைவிதியை தீர்மானிக்கும்.

Sri Lanka team’s immediate schedule

Sri Lanka vs Bangladesh
1st ODI – 23rd May – Dhaka

2nd ODI – 25th May – Dhaka

3rd ODI – 28th May – Dhaka

Sri Lanka vs England
1st T20I – 23rd June – Cardiff

2nd T20I – 24th June – Cardiff

3rd T20I – 26th June – Southampton

1st ODI – 29th June – Durham

2nd ODI – 1st July – London

3rd ODI – 4th July – Bristol

Sri Lanka vs India
1st ODI – 13th July

2nd ODI – 16th July

3rd ODI – 19th July

1st T20I – 22nd July

2nd T20I – 24th July

3rd T20I – 27th July

No comments:

Post a Comment