2020 A/L பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 4, 2021

2020 A/L பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின

2020 க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் (04) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளை, www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk அல்லது exams.gov.lk எனும் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் இலவசமாக அறிந்துகொள்ள முடியும்.

க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் கடந்த வருடம் ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெற்றது.

நாடு முழுவதிலுமுள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் 362,824 பரீட்சார்த்திகள் பரீட்சைக்காக விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.பொ.த. (உ/த) பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பம் தொடர்பில் விரைவில், தேசிய பத்திரிகைகளில் அறிவிக்கப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு
011 278 4208
011 278 4537
011 3188 350
011 314 0314 

இலக்கங்களை தொடர்பு கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இது தொடர்பான உடனடி அழைப்புக்கு 1911

No comments:

Post a Comment