நைஜீரியவில் ஆயுதமேந்திய கும்பலால் 150 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல் - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

நைஜீரியவில் ஆயுதமேந்திய கும்பலால் 150 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் நைஜீர் மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய பாடசாலையிலிருந்து டஜன் கணக்கான மாணவர்களை ஆயுதமேந்திய கும்பல் ஞாயிற்றுக்கிழமை கடத்திச் சென்றதாக காவல்துறையினரும் மாநில அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

கடத்தல் நடவடிக்கையின்போது சுமார் 200 மாணவர்கள் பாடசாலையில் இருந்ததாக கூறப்படுவதுடன் 150 அல்லது அதற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் கடத்தப்பட்டு 40 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சாலிஹு டாங்கோ என்ற இஸ்லாமிய பாடசாலையில் இருந்து மாணவர்களை கடத்திச் செல்வதற்கு முன்னர், தாக்குதல் நடத்தியவர்கள் டெஜினா நகரில் மோட்டார் சைக்கிளில் வந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனால் ஒரு குடியிருப்பாளர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் நைஜர் மாநில பொலிஸ் செய்தித் தொடர்பாளர் வாசியு அபியோடூன் தெரிவித்தார்.

கிராமங்களை சூறையாடுவது, கால்நடைகளைத் திருடுவது, மக்களை பிணைக் கைதிகளாகக் கொண்டு ஆயுதமேந்திய கும்பல்கள் வடமேற்கு மற்றும் மத்திய நைஜீரியாவில் வசிப்பவர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் முதல் ஞாயிற்றுக்கிழமை கடத்தலுக்கு முன்னர், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட மொத்தம் 730 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad