மட்டக்களப்பு செங்கலடியில் பிறந்தநாள் கொண்டாடிய 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்! - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 12, 2021

மட்டக்களப்பு செங்கலடியில் பிறந்தநாள் கொண்டாடிய 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் பினான்ஸ் கம்பனி ஒன்றின் முகாமையாளரின் பிறந்த தினத்தை பினான்ஸ் கம்பனியில் இன்று (12) கொண்டாடிய அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட 14 பேரை கைது செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கும் பொது சுகாதார அதிகாரிகளுக்கும் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பினாஸ் கம்பனியை பொலிஸாரும் சுகாதாரத் துறையினரும் சம்பவதினமான இன்று காலையில் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு முகாமையாளருக்கு இன்று பிறந்த தினத்தையிட்டு அவருக்கு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஒன்றினைந்து கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தபோது பொலிஸார் முற்றுகையிட்டு அங்கு அரச சுகாதார அமைச்சின் கொரோனா சட்டத்தை மீறி ஒன்றுகூடிய 14 பேரை கைது செய்து அவர்களை பொது சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தினர்.

அதேவேளை குறித்த பினான்ஸ் கம்பனியின் முகாமையாளருக்கு எதிராக கொரோனா சட்டத்தை மீறி ஒன்றுகூடிய மற்றும் அரசாங்கத்தின் சட்டத்தை மீறிய குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இரவு மட்டக்களப்பு நகர் கோட்டமுனை பகுதியில் பிறந்தநாளை கொண்டாடிய 20 பேரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment