கிளிநொச்சியில் வாள் வெட்டு 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

கிளிநொச்சியில் வாள் வெட்டு 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் கூலாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியால் சென்ற உழவு இயந்திரம் மாட்டுடன் மோதியதில் ஏற்பட்ட முரண்பாடு இவ்வாறு மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான குழு முரண்பாடு இறுதியில் வாள் வெட்டில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் 11 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் ஏனையோரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை காயம் அடைந்தோரில் வயது முதிர்ந்த பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சம்பவம் தொடர்பில் கிளிநொச்பி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad