மட்டக்களப்பு மாவட்டத்தில் 116 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் 116 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (26.05.2021) 116 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். 

இதில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும் களுவான்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும் காத்தான்கடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும் வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 32 பேருமாக 116 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, வெள்ளாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகிய பிரதேசங்களில் இன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை. 

இவ்வாரே மாட்டத்தில் கொரோனா தொற்று குறைவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதார தரப்பினர் கேட்டுக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad