சம்மாந்துறையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, April 11, 2021

சம்மாந்துறையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

உருக்குலைந்த நிலையில் கால்வாயிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் இச்சடலம் இன்று (11) பொலிஸாரினால் பொதுமக்களின் தகவலின் பிரகாரம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 40 முதல் 45 வரையிலான வயது மதிக்கத்தக்க இச்சடலம் கொலை செய்யப்பட்டு போடப்பட்டதா? அல்லது இயற்கை மரணமா? என பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment