பிரிட்டனில் வாரத்திற்கு இரு முறை கொரோனா சோதனை - வீண் செலவு என விமர்சனங்கள் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

பிரிட்டனில் வாரத்திற்கு இரு முறை கொரோனா சோதனை - வீண் செலவு என விமர்சனங்கள்

இங்கிலாந்தில் உள்ள அனைவரிடமும் வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் வாரத்திற்கு இரு முறை கொரோனா வைரஸ் ரெபிட் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

30 நிமிடங்களில் முடிவை தரும் முறையிலான இந்த சோதனை இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது. 

இது நோய்த் தொற்று பற்றி விரைவாக கண்டரிவது மற்றும் முடக்க நிலையை தளர்த்துவதற்கு உதவும் என்று பிரிட்டன் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தத் திட்டம் வீண் செலவை ஏற்படுத்தக் கூடும் என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

பிரிட்டனில் முடக்க நிலையில் தளர்வுகளை கொண்டுவர எதிர்பார்க்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அங்கு வரும் 12ஆம் திகதி முதல், அவசியமற்ற சில்லறை வணிகக் கடைகளைத் திறக்கவும் வெளிப்புற நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி கிடைக்கக்கூடும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad