மே மாதம் பூமியை கடந்து செல்லவுள்ள கால்பந்து மைதான அளவிலான பாறை - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

மே மாதம் பூமியை கடந்து செல்லவுள்ள கால்பந்து மைதான அளவிலான பாறை

எதிர்வரும் மே மாதத்தில் மேலும் ஓர் பாறை நம் கிரகத்தை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"2021 AF8" என்ற பெயர் கொண்ட இந்த சிறுகோள் முதன் முறையாக மார்ச் மாதத்தில் விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு கால்பந்து மைதானத்தின் அளவை கொண்ட இந்த சிறுகோள் 260 முதல் 580 மீட்டர் வரை விட்டம் கொண்டது என விஞ்ஞானிகளினால் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தற்போது விநாடிக்கு ஒன்பது கிலோ மீற்றரையும் விட அதிக வேகத்தில் பூமியை நோக்கி நகர்வதுடன், மே 4 அன்று பூமியை கடந்து செல்லும்.

அதிர்ஷ்டவசமாக அச்சமயத்தில் சிறுகோள் பூமியிலிந்து 3.4 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் பாதுகாப்பாக கடந்து செல்லும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனினும் விஞ்ஞானிகள் இதன் நகர்வுகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை கடந்த 21 ஆம் திகதி 2001 FO32 என அழைக்கப்படும் விண்வெளி பாறையொன்றும் பூமியிலிருந்து 1.25 மில்லியன் மைல்கள் தூரத்தில் கடந்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad