கண்டி - பேராதனை, பெனிதெனிய ரயில் கடவை காப்பாளர் மீது தாக்குதல் நடத்திய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் ரயில் கடவை  மூடப்பட்டிருந்த போது, அதனூடாக பயணிக்க முயற்சித்த சந்தேகநபர்களுக்கும் ரயில் கடவை காப்பாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, தாக்குதலுக்கு இலக்கான ரயில் கடவை காப்பாளர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் உடுநுவர பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கண்டி நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
 
 

 
.jpg) 
 
 
 
.jpg) 
No comments:
Post a Comment