தனியார் கல்வி வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி - திகதியை அறிவித்தார் சுகாதார அமைச்சர் பவித்ரா - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

தனியார் கல்வி வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி - திகதியை அறிவித்தார் சுகாதார அமைச்சர் பவித்ரா

(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் தனியார் கல்வி வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 21 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டது. 

எனினும் சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டு இரு வாரங்களின் பின்னரே தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கமையில் கடந்த வாரம் மேல் மாகாணத்திலும் சகல வகுப்புக்களுக்கும் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், தற்போது தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad