தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்ட போது இலங்கை இராணுவம் பெற்ற அனுபவம் உலகின் வேறு எந்த நாட்டு இராணுவத்துக்கும் கிடைக்க வாய்ப்பில்லை - இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Friday, April 9, 2021

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்ட போது இலங்கை இராணுவம் பெற்ற அனுபவம் உலகின் வேறு எந்த நாட்டு இராணுவத்துக்கும் கிடைக்க வாய்ப்பில்லை - இராணுவத் தளபதி

உலகில் மிக மோசமான பயங்கரவாத அமைப்பாகக் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்ட போது இலங்கை இராணுவம் பெற்ற அனுபவம் உலகின் வேறு எந்த நாட்டு இராணுவத்துக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குகுலேகங்கவிலுள்ள இலங்கை இராணுவத்தின் அமைதி காக்கும் பணிகளுக்கான பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வின் போது இதனைத் தெரிவித்தார். 

இராணுவத் தளபதி மேலும் குறிப்பிடுகையில், உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை வெற்றி கொண்டதால் இலங்கை இராணுவம் பெற்ற அனுபவம் உலகின் வேறு எந்த நாட்டு இராணுவத்திடமும் இல்லை என பெருமிதமாக கூறிக் கொள்ள முடியும்.

அதனால் இலங்கையின் அமைதி காக்கும் படைகளை உலகின் அமைதி காக்கும் பணிகளுக்காக அமர்த்த ஐ.நா. சபை இணங்கிய பின்னர், இலங்கை இராணுவத்தின் வீரம், அச்சமின்மை உள்ளிட்ட பண்புகளை கண்டு இராணுவ வீரர்கள் பல்வேறு நாடுகளில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுத்தபட்டுள்ளனர்.

2009 ஆண்டு மனிதாபிமான நடவடிக்கைகள் நிறைவுறும் வரையில் அந்த பணிகளில் பங்கெடுத்தமையால் தனக்கு 2010 ஆம் ஆண்டு ஐ.நா அமைப்பின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக பணிபுரியும் வாய்ப்பு கிட்டியது.

அந்த பதவியை வகித்த காலப்பகுதியில் இலங்கை முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன்.

அத்தோடு லெபனானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கை நடமாடும் வைத்தியசாலை ஒன்றினை அந்நாட்டுக்கு அனுப்பி வைத்திருந்தோம்.

இன்றும் தென் சூடானில் இலங்கை இராணுவத்தின் வைத்தியசாலை ஒன்று இயங்கி வருகிறது. நான் ஐ.நா. அமைப்பில் பதவி வகித்த காலப்பகுதியில் இலங்கை விமானப் படையின் 6 விமானங்களை அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தி இருந்தமை எனது பதவி காலத்தில் செய்ய முடிந்த உயர்வான விடயமென கருதுகின்றேன்.

அத்தோடு இலங்கை சிப்பாய்கள் அமைதி காக்கும் பணிகளின் போது பல்வேறு பகுதிகளில் கண்ணி வெடிகளை சாத்தியமான முறையில் அகற்றியிருந்தாகவும், மறைந்திருந்து நடந்தும் தாக்குதல்கள் பலவற்றை முறியடித்துள்ளனர்.

அமைதி காக்கும் படையினரின் செயற்பாடுகளில் நாட்டின் நற்பெயர் அடங்கியுள்ளது. தற்போதைய அமைதி காக்கும் படையினரின் செயற்பாடுகள் ஐ.நா சபை மத்தியில் ஐ.நா சபையின் அமைதி காக்கும் பணிகளில் இலங்கையை படையினரை மேலும் ஈடுபட்டுந்த வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்றார்.

No comments:

Post a Comment