சுவிட்சர்லாந்து இராணுவத்தில் பெண்களுக்கான உள்ளாடையை அணிய அனுமதி - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

சுவிட்சர்லாந்து இராணுவத்தில் பெண்களுக்கான உள்ளாடையை அணிய அனுமதி

சுவிட்சர்லாந்து இராணுவத்தில் உள்ள பெண் உறுப்பினர்களுக்கு பெண்களுக்கான உள்ளாடையை அணிவதற்கு முதல் முறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய முறைமையில், இராணுவப் பணியாளர்களுக்கான நிலையான உள்ளாடைகளாக ஆண்கள் உள்ளாடைகள் மாத்திரமே வழங்கப்படுகின்றன.

சோதனை முயற்சியாக அடுத்த மாதம் தொடக்கம் குளிர் மற்றும் உஷ்ணமான பருவத்திற்கு ஏற்ப பெண்களுக்கு இரண்டு வடிவான உள்ளாடைகள் வழங்கப்படவுள்ளன.

சுவிஸ் இராணுவத்தில் பெண்கள் 1 வீதமாக உள்ளனர். எனினும் 2030 இல் இந்த எண்ணிக்கையை 10 வீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கு பொருத்தமான உள்ளாடைகள் வழங்கப்படுவது அவர்கள் இராணுவத்தில் இணைவதை ஊக்குவிக்கும் என்று சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர் மரின்னே பின்டர் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை வரவேற்றிருக்கும் சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் வியோலா அம்ஹேர்ட், இந்த பொருந்தக்கூடிய தன்மை மேம்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பெண் வீராங்கனைகளுக்கு இதுவரை காலமும் தொழதொழப்பான ஆண்களின் உள்ளாடைகளே வழங்கப்படிருப்பதோடு அது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.

தற்போது பயன்படுத்தப்படும் சுவிஸ் இராணுவ சீருடை 1980 களின் நடுப்பகுதியிலேயே முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad