யாழில் வாள்வெட்டு - இரு பிள்ளைகளின் தந்தை பலி - மூவர் வைத்தியசாலையில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

யாழில் வாள்வெட்டு - இரு பிள்ளைகளின் தந்தை பலி - மூவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற மோதலில் குடும்பத் தலைவர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அத்தோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அல்வாயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகராசா கௌசிகன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அல்வாய் வடக்கு முத்துமாரி அம்மன் கோவிலடியில் உறவினர்களுக்கு இடையில் காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இன்றையதினம் மதியம் வாய் தர்க்கமாக ஆரம்பித்து வாள் வெட்டில் முடிவடைந்துள்ளது என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைளையும் முன்னெடுத்துள்ளனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment