ஹட்டனில் காரை விபத்துக்குள்ளாகிவிட்டு தலைமைறைவான சாரதியை தேடும் பொலிஸார் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

ஹட்டனில் காரை விபத்துக்குள்ளாகிவிட்டு தலைமைறைவான சாரதியை தேடும் பொலிஸார்

வாகனத்தை விபத்துக்குள்ளாக்கிவிட்டு தலைமறைவாகிய சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

நுவரெலியா வசந்த காலத்திற்கு வந்து மீண்டும் ஹெரண பகுதிக்கு சென்ற காரொன்றே ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் நேற்று (04) இரவு 11 மணியளவில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த காரில் சாரதி உட்பட நால்வர் பயணித்துள்ள நிலையில் மதுபோதையில் காரை செலுத்திய சாரதி வாகனத்தை நடு வீதியில் செலுத்திய நிலையில் ஏனைய வாகனங்களுக்கு பயணிக்க முடியாத வகையில் இடையூறு ஏற்படும் வகையில் காரை செலுத்திய பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அவ் வழியின் வந்த ஏனைய வாகன சாரதிகளுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து மதுபோதையில் காரை பள்ளத்தில் செலுத்தி விபத்துக்குள்ளாக்கியுள்ளதாக தெரிய வருகிறது.

விபத்துக்குள்ளான காரை விட்டு விட்டு தலைமறைவான சாரதியை கைது செய்ய ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad