ஜப்பானிய கட்டுப்பாட்டில் உள்ள கடற்பகுதிக்குள் பிரவேசித்துள்ள சீன கப்பல்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, April 5, 2021

ஜப்பானிய கட்டுப்பாட்டில் உள்ள கடற்பகுதிக்குள் பிரவேசித்துள்ள சீன கப்பல்கள்

சீன அரசுக்குச் சொந்தமான இரண்டு கடலோரக் காவல்துறைக் கப்பல்கள் கிழக்கு சீனக் கடலின் செங்காகு தீவுகளுக்கு அண்மித்துள்ள ஜப்பானிய கட்டுப்பாட்டில் உள்ள கடற்பகுதிக்கு பிரவேசித்துள்ளன.

சீன அரசிற்குச் சொந்தமான கப்பல்களின் இந்தப் பிரவேசம் டோக்கியோவின் கண்டனத்திற்கு உட்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இரண்டு கப்பல்களையும் அக்கடற்பரப்பிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு ஜப்பான் கப்பல்கள் எச்சரிக்கை விடுத்ததாக கடலோர காவற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஜப்பானிய அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் கட்சுனோபு கடோ, செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவிக்கையில் “ஜப்பானிய அரசாங்கம் சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டத்தினை நடத்தி வருகின்றது.

முன்னதாக சீனாவின் ஹைஜிங் கப்பல்கள் ஜப்பானிய மீன்பிடி படகுகளை நோக்கி வந்துள்ளன. இந்த நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை ஜப்பானிய கடலோர காவல்படையின் 11ஆவது பிராந்திய தலைமையகமான நஹாவில், சீன கப்பல்கள் ஒகினாவா மாகாணத்தில் உள்ள ஜப்பானிய நிர்வாக தீவுகளில் ஒன்றான மினாமிகோஜிமாவிற்கு தெற்கே ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பிற்குள்ளும் பிரவேசித்துள்ளன.

இந்த ஆண்டு சீன அரசுக்குச் சொந்தமான கப்பல்களால் சென்காகு தீவுகளுக்கு அருகிலுள்ள ஜப்பானிய கடலுக்குள் பிரவேசிப்பது 11ஆவது தடவை என்பதும் குறிப்பிட்டதக்க விடயமாகும்.

த ஜப்பான் டைம்ஸ்

No comments:

Post a Comment