பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஐவர் பலி, கைதிகள் பலர் தப்பி யோட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஐவர் பலி, கைதிகள் பலர் தப்பி யோட்டம்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் பொலிசாரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். 

இந்த நிலையில் நைஜீரியாவின் தெற்கு பகுதியில் இமோ மாகாணத்தின் தலைநகர் ஓவர்ரியில் உள்ள பொலிஸ் நிலையம் மீது நேற்றுமுன்தினம் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 

மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.‌ பயங்கரவாதிகளின் இந்த வெறிச்செயலில் பொலிஸார் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.

மேலும் இந்த தாக்குதலை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் பலர் தப்பி ஓடினர். இந்த சம்பவத்துக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக கடந்த 5ம் திகதி ஓவர்ரியில் உள்ள சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், இதில் 1,800 க்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடியதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment