மீண்டும் திறக்கப்படவுள்ள பல்கலைக்கழகங்கள் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

மீண்டும் திறக்கப்படவுள்ள பல்கலைக்கழகங்கள்

கொரோனா தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் ஏப்ரல் 14 க்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும் என்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கான உரிய திகதி குறித்து தற்சமயம் விவாதங்கள் நடத்தப்பட்டு வருவதாக அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு திறக்கப்படும் பல்கலைகழகங்களுக்கு சுகாதார ஆலோசனைக் கோவையொன்றை  அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பல்கலைக்கழங்களில் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது பல்கலைக்கழகங்களில் பரீட்சைகளை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad