இந்திய தலைமை தேர்தல் ஆணையாளருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளருக்கு கொரோனா

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என முக்கிய தலைவர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையாளராக கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்ட சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்கள் தரப்பில் இதுவரை எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் இல்லை என்றாலும் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் இதை தெரிவித்துள்ளனர்.

கொரோனா காரணமாகவே இரு மூத்த அதிகாரிகளும் வீட்டில் இருந்து பணிபுரிவதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment