சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க, அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இப்பதவியில் இருந்த நாலக கலுவெவ அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், பதில் பணிப்பாளர் நாயகமாக, ருவன் சத்குமார நியமிக்கப்பட்டிருந்தார்.
ஊடகத்துறையில் நான்கு தசாப்தகால அனுபவத்தைக் கொண்டுள்ள சமரநாயக்க, “தவச” செய்திப் பத்திரிகையின் உதவி ஆசிரியராக ஊடகத்துறைக்குள் பிரவேசித்தார்.
அதன் பின்னர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் உதவி ஆசிரியராக சேவையாற்றிய அவர், பின்னர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவின் பணிப்பாளராக ஐந்து வருடங்கள் பதவி வகித்தார்.
அதனைத் தொடர்ந்து, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் தகவல் மையத்தின் தலைவராக நீண்ட காலம் சேவையாற்றிய அவர், அதன் பின்னர் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
மொஹான் சமரநாயக்க இதற்கு முன்னர், ஜனாதிபதியின் பேச்சாளராகவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment