அரச துறையின் மூத்த அதிகாரி சிவஞானசோதி ஐயாவின் இழப்பு பாரிய வெற்றிடமாகும் - அங்கஜன் எம்.பி இரங்கல் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

அரச துறையின் மூத்த அதிகாரி சிவஞானசோதி ஐயாவின் இழப்பு பாரிய வெற்றிடமாகும் - அங்கஜன் எம்.பி இரங்கல்

யாழ்.சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட வே.சிவஞானசோதி ஐயா பல அமைச்சுக்களில் செயலாளராகவும் பணியாற்றி இருந்தார். குறிப்பாக இந்து கலாச்சார அமைச்சு, பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, வடக்குச் செயலணி, நல்லிணக்க அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார். மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், இறுதியில் சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் இவர் கடமையாற்றியிருந்தார். 

ஐயா கொழும்பு - அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை எம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இலங்கையின் சிறந்த அரச விருதுகளையும் கல்வியியல் விருதுகளையும் பெற்ற ஐயா நாட்டின் அரச பணியில் பெரும் பங்கை ஆற்றியிருந்தார். 

ஒரு தமிழ் அரச அதிகாரி என்ற வகையில் என்னுடன் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு செயலாற்ற வேண்டிய பல்வேறு துறைசார் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கிய ஐயாவின் இழப்பு எமது அரச சேவைக்கு ஈடுஇணை செய்ய முடியாத்தொன்றாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இரங்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad