ஹாபிஸ் நசிர் எம்.பியின் ஏற்பாட்டில் கல்வி இராஜாங்க அமைச்சருடன் மட்டு. கல்வி வலய அதிபர்கள் சந்தித்துப் பேச்சு - News View

About Us

About Us

Breaking

Friday, April 9, 2021

ஹாபிஸ் நசிர் எம்.பியின் ஏற்பாட்டில் கல்வி இராஜாங்க அமைச்சருடன் மட்டு. கல்வி வலய அதிபர்கள் சந்தித்துப் பேச்சு

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் பௌதீக, ஆளணி மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்தவிற்கும் அந்த பிரதேசத்திலுள்ள பாடசாலை அதிபர்களுக்குமான சந்திப்பு இன்று (09) கல்வி அமைச்சில் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டின் கோரிக்கைக்கு இணங்க நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பாடசாலை அதிபர்களுடன் ஹாபிஸ் நசீர் எம்பியுடன் பாடசாலை அதிபர்கள், கல்வி அமைச்சு மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள், இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் SMASM. சரூஜ் (நகர சபை உறுப்பினர்), ஏ.எம்.ஹக்கிம் (Eng) மாகாண பொறியியலாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட அதிபர்கள் தமது பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை தனித்தனி பாடசாலை ஆவணங்களாக சமர்ப்பித்தனர். 

மத்தி கல்வி வலயத்திலுள்ள 1AB,1C பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் அந்த பிரதேசத்தில் தேசிய பாடசாலைகளின் அவசியம் குறித்தும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்தவிடம் ஹாபிஸ் நசீர் எம்பி விரிவாக எடுத்துரைத்தார்.

எஸ்.ஐ.எம். நிப்ராஸ்

No comments:

Post a Comment