சட்டத்தரணி றுடானி ஸாஹிர் எழுதிய 'அபுல்கலாம் பழீல் மௌலானா வாழ்வும் பணியும்' நூல் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 6, 2021

சட்டத்தரணி றுடானி ஸாஹிர் எழுதிய 'அபுல்கலாம் பழீல் மௌலானா வாழ்வும் பணியும்' நூல் வெளியீடு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மருதமுனை சட்டத்தரணி றுடானி ஸாஹிர் எழுதிய 'அபுல்கலாம் பழீல் மௌலானா வாழ்வும் பணியும்' என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (10) பிற்பகல் 4 மணிக்கு மருதமுனை பொது நூலக சமூக வள நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

பழீல் மௌலானா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சட்டத்தரணி எப்.எம்.ஏ. அன்ஸார் மௌலானா தலைமையில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டு விழாவில், பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்னாள் தலைவரும் தேசிய கல்வி நிறுவகத்தின் பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதோடு, கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஸால் காசிம், சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸர்ரப் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா ஆகியோரும் விஷேட அதிதியாக கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீபும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் (நளீமி), கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்ஸார், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை பிரதேச செயலாளர் லியாகத் அலி, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம்.ஏ. லத்தீப், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ஜலாலுத்தீன்(கபூரி), தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கல்வி சேவை ஆணைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி க. ஜெயக்குமார், ஓய்வுபெற்ற அதிபர்களான ஏ.எம்.ஏ.சமது, இஸ்மாயில் மௌலானா, முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அஷ்ஷெய்க். எஸ்.எல்.எம்.ஹனீபா, மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவருமான அஷ்ஷெய்க் எம்.ஐ.ஹுஸைனுத்தீன் (றியாழி), முன்னாள் செனட்டர் மர்ஹும் மசூர் மௌலானாவின் புதல்வர்களான மௌலானா சன்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்டின் உரிமையாளரும் முகாமைத்துவ பணிப்பாளருமான சியாம் மௌலானா, அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் அக்ரம் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் பிரிவின் சிரேஷ்ட தயாரிப்பாளர் மபாஹிர் மௌலானா, இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜயா கொள்கலன் இறங்கு துறையின் கட்டுப்பாட்டு அறையின் முகாமைத்துவ உதவியாளர் (திட்டமிடல்) இல்ஹாம் மௌலானா, துறைமுக அதிகார சபையின் ஊழியர் நௌஸாத் மௌலானா மற்றும் முன்னாள் சதொச முகாமையாளர் எப்.ஆர். மௌலானா ஆகியோரும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வில், வரவேற்புரையை அமைப்பின் தவிசாளரும் சம்மாந்துறை ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தின் விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ. அன்ஸார் மௌலானா (நளீமி), வெளியீட்டுரையை நூலாசிரியர் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் மற்றும் நன்றியுரையை அமைப்பின் செயலாளர் எம்.எச். இம்திசாவும் நிகழ்த்துகின்றனர்.

பிறை எப்.எம் - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளர் பசீர் அப்துல் கையூம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

No comments:

Post a Comment