சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நேற்று (12) பிற்பகல் 5.00 மணியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தப்படுவதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment