இறுதி நொடியிலும் கணவனின் உயிரைக் காப்பாற்ற போராடிய மனைவி : மனதை உருக்கும் புகைப்படம் - இந்தியாவில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

இறுதி நொடியிலும் கணவனின் உயிரைக் காப்பாற்ற போராடிய மனைவி : மனதை உருக்கும் புகைப்படம் - இந்தியாவில் சம்பவம்

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஒட்சிசன் பற்றாக்குறை காரணமாக உயிரிழக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவன் ஒட்சிசன் பற்றாக்குறையால் உயிருக்கு போராடி உயிரிழக்கும் முன் மனைவி உயிர்ச் சுவாசம் கொடுத்து காப்பாற்ற நிகழ்ந்த சம்பவம் நெஞ்சை உருக வைக்கும் விதமாக அமைந்தது.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் பிரிவு 7 இல் கணவன் மனைவி வசித்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில், கணவருக்கு கொரோனா தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

தனது இல்லத்திலிருந்து கணவரை ஒரு முச்சக்கர வண்டியில் மனைவி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே அவரின் கணவர் மூச்சுத் திணறல் காரணமாக தவிக்க, வாய் மூலம் புத்துயிர் சுவாசம் கொடுக்க முயன்றுள்ளார் மனைவி. ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

வைத்தியசாலைக்கு வெளியே ஒரு முச்சக்கர வண்டிக்குள் மனைவியின் மடியில் கணவர் உயிரிழந்துள்ளார்.

கணவனின் உயிரிழப்பை தாங்க முடியாமல் மனைவி அந்த இடத்திலே கதறி அழுதுள்ளார்.

குறித்த மனைவி கதறும் காட்சிகளும், கணவனுக்கு உயிர் சுவாசம் கொடுக்கும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது.

உயிர் போகும் இறுதி நிமிடத்தில் தனது கணவரை எப்படியாக பிழைக்க வைக்க வேண்டும் என்று இறுதி நிமிடம் வரை மனைவி போராடிய காட்சிகள் நெட்டிசன்களை பரிதாபபட வைத்துள்ளது.

வைத்தியசாலைகளில் ஒட்சிசன் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறப்பதாக நகரங்களில் பெருவாரியாக நடந்து வருகிறது எனக் கூறப்படுகிறது.

மருத்துவ ஒட்சிசன் மற்றும் மருந்துகளை வாங்குவதற்காக தற்போது பல நாடுகள், பல தனியார் நிறுவன முதலாளிகள், பல்வேறு பொதுமக்கள் உதவி வருகின்றனர். அப்படி இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad