ரயில் தண்டவாளத்திற்கு பயன்படுத்தும் இரும்புகளை திருடிய இருவர் தப்பியோட்டம் - வாகனேரியில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

ரயில் தண்டவாளத்திற்கு பயன்படுத்தும் இரும்புகளை திருடிய இருவர் தப்பியோட்டம் - வாகனேரியில் சம்பவம்

மட்டக்களப்பு - கொழும்பு ரயில் தண்டவாளத்தின் இரும்புகள் திருட்டப்பட்ட சம்பவமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் அமைந்துள்ள ரயில் பாதையின் இரும்புகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் குறித்த பகுதியால் தனது வயல் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது இருபது வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த இரும்புகளை திருடுவதை கண்டுள்ளார்.

குறித்த நபரை கண்டதும் இரு இளைஞர்களும் திருடிய இரும்புகளை கைவிட்டுவிட்டு காட்டுவழியே தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில், திருடப்பட்ட இரும்புகளை குறித்த நபர் எடுத்து அருகிலுள்ள புணானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக புணானை புகையிரத நிலையத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் இரு இளைஞர்களையும் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்று அந்நபர் தெரிவித்துள்ளார்.

கேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad