ஈராக் ராணுவ தளத்தை குறி வைத்து 3 ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு ரொக்கெட், ராணுவ தளத்தை தாக்கியது. மற்றைய இரு ரொக்கெட்டுகளும் ஊருக்குள் போய் விழுந்தன.
ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் துருக்கி நாட்டின் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.
அந்த தளத்தை குறி வைத்து நேற்றுமுன்தினம் இரவு 3 ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு ராக்கெட், ராணுவ தளத்தை தாக்கியது. மற்றைய இரு ரொக்கெட்டுகளும் ஊருக்குள் போய் விழுந்தன.
இந்த தாக்குதலில் துருக்கி வீரர் ஒருவர் பலியானார். ஒரு குழந்தை படுகாயம் அடைந்தது.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் துருக்கி படைகள், ஈராக்கில் இருந்து கொண்டு குர்தீஷ் இன போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
எனவே துருக்கி படைகள் நடத்தி வருகின்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கின்ற விதத்தில் இந்த தாக்குதலை குர்தீஷ் போராளிகள் நடத்தி இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த குர்தீஷ் இன போராளிகளை துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment