விஜயதாஸவின் கருத்து உண்மை என்றால் நாம் அதனை கடுமையாக எதிர்ப்போம் - அமைச்சர் மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

விஜயதாஸவின் கருத்து உண்மை என்றால் நாம் அதனை கடுமையாக எதிர்ப்போம் - அமைச்சர் மஹிந்த அமரவீர

(நா.தனுஜா)

விஜயதாஸ ராஜபக்ஷ கூறுவதைப்போன்று இலங்கை சீனாவின் காலனித்துவ நாடாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் அத்தகைய நிலையொன்று ஏற்படுமாயின், நாம் அதனை கடுமையாக எதிர்ப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போது குறிப்பாக மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியதுடன் இது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டது.

கொழும்பு துறைமுக நகர விவகாரம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இது குறித்து கலந்துரையாடப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் தற்போது உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், அதனடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். கொழும்பு துறைமுக நகர இடம் அரசாங்கத்தின் வசமாக வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment