காலாவதியாகியுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

காலாவதியாகியுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(எம்.மனோசித்ரா)

காலாவதியாகியுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இம்மாதம் முதலாம் திகதியுடன் காலாவதியாகியுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார்.

கொவிட் வைரஸ் தொற்றின் காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கும் செயற்பாடுகள் தடைபட்டிருந்தன. இதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த சந்தர்ப்பத்தின் பின்னர் அவ்வாறு நீடிப்பதற்கான தேவை ஏற்படாது என்றும், இதுவே கடைசி சந்தர்ப்பம் என்றும் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad