அஸ்ட்ரா செனேகாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்தது ஐரோப்பிய ஒன்றியம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

அஸ்ட்ரா செனேகாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்தது ஐரோப்பிய ஒன்றியம்

அஸ்ட்ரா செனேகா மருந்துத் தயாரிப்பு நிறுவனம், குறைந்த அளவு தடுப்பூசிகளை மீண்டும் மீண்டும் விநியோகம் செய்ததற்காக அந்நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் வழக்குத் தொடுத்துள்ளது.

உரிய காரணமின்றித் தொடரப்பட்டுள்ள அந்த வழக்கில் தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் வலுவாக முன்வைக்கவிருப்பதாக அஸ்ட்ரா செனேகா தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே உறுதியளித்திருந்த 120 மில்லியன் தடுப்பு மருந்தில் 31 மில்லியனை அஸ்ட்ரா செனேகா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விநியோகித்து விட்டது. 

அதேபோன்று ஜூன் மாதத்துக்குள் வழங்க உறுதியளித்த 180 மில்லியன் தடுப்பு மருந்தில், 70 மில்லியனை மட்டும் வழங்கப்போவதாக அந்நிறுவனம் கூறியிருந்தது.

அவ்வளவு குறைவான மருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தடுப்பூசி போடும் பணியைக் கடுமையாகப் பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. 

உற்பத்தி பிரச்சினையால் தடுப்பு மருந்து விநியோகம் குறைக்கப்படக்கூடும் என்று அஸ்ட்ரா செனேகா இந்த ஆண்டு ஆரம்பத்தில் கூறி இருந்தது. 

அந்த நிறுவனம் 2021 இன் முதல் காலாண்டில் 80 மில்லியன் டோஸ்களை விநியோகிக்க திட்டமிட்டிருந்தபோதும் அதனால் 30 மில்லியன் டோஸ்களையே வழங்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment