இரகசியங்களை ரஷ்யாவுக்கு விற்ற இத்தாலியர் பிடிபட்டார் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

இரகசியங்களை ரஷ்யாவுக்கு விற்ற இத்தாலியர் பிடிபட்டார்

ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவருக்கு இரகசிய ஆவணங்களை கையளித்த குற்றச்சாட்டில் இத்தாலி கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேவுபார்த்தது மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தேகத்திலேயே இராணுவ பொலிஸார் மூலம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதில் தொடர்புபட்ட ரஷ்ய நாட்டவர் இத்தாலியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றுபவராவார். அவர் நாடு கடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலி வெளியுறவு அமைச்சினால் ரஷ்ய தூதுவர் செர்கேய் ராசோவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ரோம் நகரில் பணத்திற்காக இந்த ஆவணங்கள் கையளிக்கப்படும் நேரத்திலேயே குறித்த நபர் பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மடக்கி பிடிக்கப்பட்டார்.

இராணுவத்துடன் தொடர்புபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதை ரஷ்ய தூதரகம் உறுதி செய்திருக்கும் நிலையில் இந்த சம்பவம் இரு நாட்டு உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறு வழங்கப்பட்ட ஆவணத்தில் நேட்டோ அமைப்பின் இரகசியங்கள் இருப்பதாக இத்தாலியின் செய்தித் தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment