இந்தோனேசியாவில் சரக்குக் கப்பல் மற்றும் மீன்பிடிப் படகு மோதியதில் பலர் மாயம் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

இந்தோனேசியாவில் சரக்குக் கப்பல் மற்றும் மீன்பிடிப் படகு மோதியதில் பலர் மாயம்

இந்தோனேசியாவில் சரக்குக் கப்பல் மற்றும் மீன்பிடிப் படகு மோதிய விபத்து ஒன்றில் 17 பேர் காணாமல் போயுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தை அடுத்து மீன்பிடிப் படகில் இருந்த பதினைந்து பேர் கரைக்கு அழைத்து வரப்பட்டபோதும் காணாமல்போன 17 பேரை தேடி மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

மரப்பலகையாலான மீன்பிடிப் படகில் 32 பேர் இருந்ததாக இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் இந்தோனேசிய தீவான போர்னியோவில் இருந்து மசகு எண்ணெயை ஏற்றிய சரக்குக் கப்பல் ஒன்றே இந்த மீன்பிடிப் படகில் மோதியுள்ளது.

சரக்குக் கப்பலில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 17,000 தீவுகளைக் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் போதிய பாதுகாப்பு தரத்தை பின்பற்றாத காரணத்தால் படகு விபத்துகள் அடிக்கடி இடம்பெறுகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad