சர்கார் பட பாணியில் வாக்கை செலுத்திய வாலிபர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

சர்கார் பட பாணியில் வாக்கை செலுத்திய வாலிபர்

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் சர்கார் பட பாணியில் 49 பி சட்டப்பிரிவை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் வாக்கை பதிவு செய்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் இன்று நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வந்தனர்.

இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் சர்கார் பட பாணியில் 49பி சட்டப்பிரிவை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் வாக்கை பதிவு செய்துள்ளார். 

ரமேஷ் என்ற வாலிபர் திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட (பாகம் எண் 190 வரிசை எண் 990), மேல கல்கண்டார்கோட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய சென்றார். அப்போது அவரது வாக்கை யாரோ கள்ள வாக்காகச் செலுத்தியது தெரியவந்ததால் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலரிடம் தான் ரமேஷ் என்பதற்கான ஆவணங்களை காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் '49 P' சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கை செலுத்தியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad