தென்னாபிரிக்காவுடனான மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினார் சதாப் கான் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

தென்னாபிரிக்காவுடனான மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினார் சதாப் கான்

காயம் காரணமாக தென்னாபிரிக்க அணியுடனான மீதமுள்ள வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சதாப் கான் விலக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 4 ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பேட்டிங் செய்யும் போது சதாப் கானுக்கு கால் விரலில் காயம் ஏற்பட்டது.

இதனால் தென்னாபிரிக்காவுடனான ஏஞ்சிய போட்டிகள் (3 ஆவது ஒருநாள் மற்றும் நான்கு டி-20 போட்டிகள்) மாத்திரம் அல்லாது சிம்பாப்வே அணியுடனான தொடரையும் அவர் இழப்பார் என்று ஐ.சி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் சதாப் கான்னுக்கு குறைந்தது நான்கு வாரங்கள் ஓய்வு தேவை என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad